palamunaiworld.: குழந்தைகளுக்கான விசேட உலாவி


குழந்தைகளுக்கான விசேட உலாவி

இணையத்தினை வளர்ந்தவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இணையத்திலிருந்து பல்வேறு நன்மைகளைக் குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர்.
அவர்களின் அறிவாற்றலைப் பெருக்க இது உதவுகின்ற போதிலும் இணையத்தில் தீமைகளும் இருக்கவே செய்கின்றன.
பொதுவாக தமது குழந்தைகள் இணையத்துடன் இணைந்து இருக்கும் போது பெற்றோர் ஆபாச தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், செட்டிங் போன்றவற்றில் சென்று விடக்கூடாது என அவர்கள் அதிக அக்கறை கொள்வார்கள்.

எனினும் அவர்களால் தமது குழந்தைகளை எந்நேரமும் கண்காணித்துக்கொண்டு இருக்க முடிவதில்லை.
எனவே தங்களது குழந்தைகளின் பாதுகாப்பான இணைய உபயோகத்திற்கு உறுதி அளிக்கும் உலாவியொன்றினைப்பற்றியதே இச்செய்தி.
குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இவ்வுலாவியின் பெயர் Kidzui.
இதை உருவாக்கியவர்கள் பல மில்லியன் தளங்கள், வீடியோப் படங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை இணைத்திருக்கிறார்கள்.
அதுவும் நிர்வாகிகளால் பலமுறை சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பானவை என்ற பின்னரே இதில் இணைக்கப்பட்டிருக்கின்றது.
இதில் குழந்தைகள் பாதுகாப்பான காணொளிகளை மட்டுமே பார்வையிடமுடியும். மேலும் ஏராளமான விளையாட்டுகளும் இதில் உள்ளன.
இதில் முதலில் பெற்றோர்கள் தங்களது கணக்கை உருவாக்கி குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான(Parental Controls) அமைப்பை செய்து கொள்ள முடியும்.
இதன்படி உங்கள் குழந்தைகள் இவ்வுலாவியை மட்டுமே பயன்படுத்தக்கூடியவாறும், கணணியில் வேறு எதனையும் செய்யமுடியாதவாறும் செட்டிங்களை மேற்கொள்ளமுடியும்.
பாதுகாப்பான இவ்வுலாவியை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கென தரவிறக்கம் செய்து கொள்ளுங்களேன்.
தரவிறக்க சுட்டி