palamunaiworld.: குரோமில் கூகுள் பிளசின் வீடியோ சட்டிற்கான வசதியை செய்வதற்கு


குரோமில் கூகுள் பிளசின் வீடியோ சட்டிற்கான வசதியை செய்வதற்கு

சமூகவலைத்தளங்களின் போட்டியினால் கூகுள் பிளஸ் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் Hangout எனும் வீடியோ அழைப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலில் நேரடியாக Google+ Hangout மூலம் உங்கள் கூகுள் பிளஸ் வட்டத்திலுள்ளவர்களுடன் மட்டும் வீடியோ சட்டிங் செய்ய முடியாது. எனினும் இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள இனந்தெரியாத 12 வரையானவர்களுடன் வீடியோ சட்டிங்கில் ஈடுபட முடியும்.
உங்கள் நண்பர்களுடன் Google+ Hangout ஐ பயன்படுத்தி வீடியோ சட்டிங்கில் ஈடுபட வேண்டுமாயின் Hangout நீட்சியை குரோமில் நிறுவ வேண்டும்.
அவ்வாறு நிறுவியதும் addressbarல் நீல நிற icon ஒன்று தோன்றும். அதில் கிளிக் செய்வதன் மூலம் Google+ Hangout ஐ இயங்க செய்து அந்த நேரத்தில் ஓன்லைனில் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களுடன் சட்டிங்கில் இணைந்து கொள்ள முடியும்.

தரவிறக்க சுட்டி
Google+ Hangout இன் நன்மைகள்
1. விரைவாக சட்டிங்கில் இணைந்து கொள்ள முடிதல்.
2. அவசியமானவர்களின் வரிசையில் நண்பர்களை ஒழுங்குபடுத்த முடிதல்.
3. வரையறை அற்ற, வரையறைக்கு உட்பட்ட ஓன்லைன் சட்டிங் நடவடிக்கைகளை அறியக்கூடியதாக இருத்தல்.
4. பாதுகாப்பானதாக காணப்படுதல்.