இதில் 5.1 மெகாபிக்சல் கமெரா பொருத்தப்பட்டுள்ளதுடன் 1080 பிக்சல் பிரிதிறன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யமுடியும். மேலும் 16 அடி ஆழம் வரையான நீரிற்குள் பாதுகாப்பாக இருக்கக்கூடியது. எனினும் இதனை விட ஆழம் அதிகரிக்கும்போது நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதில் காணப்படும் 4GB நிலையான நினைவகம் மூலம் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு வீடியோப் பதிவை மேற்கொள்ள முடியும். இதன் பெறுமதி 179.99 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.