இதற்கு டிவிட் வைப் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. இந்த தளம் டுவிட்டர் பக்கத்தில் உள்ள குறும்பதிவுகள் அனைத்தையும் நீக்கி தருகிறது.
இதற்கு பதிலாக டுவிட்டர் கணக்கையே நீக்கி விடலாமே என்று கேட்கலாம். நீக்கலாம் தான், ஆனால் டிவிட்டர் கணக்கில் வெளியில் இருந்து முற்றிலுமாக வெளியேறிவிட முடிவு செய்யும் போது தான் இது சரியாக இருக்கும்.
காரணம் டுவிட்டர் கணக்கை நீக்கியவுடன் டுவிட்டரில் நமது அடையாளத்தை இழந்து விடுவோம். மீண்டும் நுழைய நினைத்தால் புதிய பெயரில் தான் கணக்கை தொடங்க வேண்டும். அத்துடன் ஏற்கனவே பெற்றிருந்த டுவிட்டர் தொடர்புகளை இழந்து விடுவோம்.
டிவிட் வைப் சேவையை பயன்படுத்தும் போது டுவிட்டர் கணக்கை இழக்க மாட்டோம். குறும்பதிவுகளை மட்டுமே நீக்குவோம், அதே பெயரில் நாம் தொடர்ந்து குறும்பதிவு செய்யலாம், பின்தொடர்பாளர்களையும் இழக்காமல் இருக்கலாம்.
இணையதள முகவரி