இவ்வாறு தொடர்ச்சியாக நகலெடுக்கப்படும் போது
அவை இயங்குதளங்களில் காணப்படும் கிளிப்போர்ட் எனப்படும் பகுதியில் சேமிக்கப்படுகின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட தரவுகளை மீட்டு நாம் மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறு தரவுகளை மீட்பதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் சிறந்த பயனைக் கொண்டுள்ள மென்பொருட்கள் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றன. எனவே அதிகளவான வசதிகளை பெறும்பொருட்டு பின்வரும் மென்பொருட்களை பயன்படுத்தலாம்.
1.Clipdiary: இம்மென்பொருட்கள் மூலம் 7 நாட்களுக்குரிய கிளிப்போர்ட் தரவுகளை மீட்க முடியும்.
தரவிறக்கச்சுட்டி - http://clipdiary.com/
2.ClipMagic: இதில் நீங்கள் விரும்பியவாறு கிளிப்போர்ட்டினை பில்டர் செய்யும் வசதி காணப்படுவதுடன், அவற்றை ஒழுங்குபடுத்தவும் முடியும்.
தரவிறக்கச்சுட்டி - http://www.clipmagic.com/windows-clipboard.html
3.Ditto: இதன் மூலம் கிளிப்போர்ட்டில் சேமிக்கப்பட்ட தரவுகளின் பிரிவியூவை பார்க்க முடிவதுடன், இலவச மென்பொருளாகவும் காணப்படுகின்றது.
தரவிறக்கச்சுட்டி - http://www.clipmagic.com/download.html