palamunaiworld.: கூகுள் டிரைவில் பகிரும் கோப்புகளை மற்றவர்கள் தரவிறக்கம் செய்யாமல் தடுப்பதற்கு


கூகுள் டிரைவில் பகிரும் கோப்புகளை மற்றவர்கள் தரவிறக்கம் செய்யாமல் தடுப்பதற்கு

சமீபத்தில் கூகுள் 5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவ் எனப்படும் Cloud Storage வசதியை வழங்கியது.
இதன் மூலம் நம்முடைய கோப்புகளை ஓன்லைனில் சேமித்து வைத்து
பின்பு எங்கு இருந்தும், எந்த நேரத்திலும் கணணி மற்றும் Android சாதனங்களில் இருந்து இயக்க முடியும். அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட கோப்புகளை நண்பர்களிடமும், சமூக தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் மற்றவர்களிடம் நாம் பகிரும் கோப்புகளை அவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி கூகுள் டிரைவில் உள்ளது. ஆதலால் மற்றவர்களிடம் பகிரும் கோப்புகளை தரவிறக்கம் செய்ய முடியாதபடி தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முதலில் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கில் நுழைந்து நீங்கள் பகிர வேண்டிய கோப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் File மெனுவை ஓபன் செய்து அதில் உள்ள Prevent Viewers from Downloading என்ற லிங்கை அழுத்தவும்.
பிறகு எப்பொழுதும் போல Share பட்டனை அழுத்தி உங்கள் கோப்பை சமூக தளங்களிலும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் பகிர்ந்த லிங்கில் கோப்பை ஓபன் செய்தால் அவர்களுக்கு தரவிறக்கம் செய்யும் வசதி செயலற்று இருக்கும்.
அவர்களால் உங்கள் கோப்பை நேரடியாக தரவிறக்கம் செய்ய முடியாது.