palamunaiworld.: கணணி விளையாட்டி​ல் மேலும் ஒரு அற்புதமான தொழில்நுட்​பம் அறிமுகம்


கணணி விளையாட்டி​ல் மேலும் ஒரு அற்புதமான தொழில்நுட்​பம் அறிமுகம்

பொழுதுபோக்கிற்காகவும், மூளை விருத்தியை அதிகரிக்கவும் அதிகளவானவர்களால் கணணி விளையாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் நாளுக்கு நாள் கணணி விளையாட்டானது புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டு
வருகின்றது.
இம்மாற்றங்களின் அடிப்படையில் தற்போது கணணி விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்கென புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொடுதிரைக் கட்டுப்படுத்திகள்(touchscreen gaming controller) உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Ringbow என அழைக்கப்படும் இந் நவீன தொழில்நுட்பமானது அன்ரோயிட் சாதனங்கள் மற்றும் iOS சாதனங்கள் போன்றவற்றில் செயற்படக்கூடியதுடன் ஒருமுறை சார்ச் செய்து தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்கள் வரை பயன்படுத்தக்கூடியது.