அசுர வேகத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வரும் மடிக்கணனிகளை(laptops) பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தயாரித்து வருகின்றன.
அதே வேளை ஜப்பானின் பிரபல்யமான நிறுவனங்களில் ஒன்றான Fujitsu சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது.
அதாவது பாவனைக்கு உதவாத CD, DVD க்களைப் பயன்படுத்தி அதிநவீன மடிக்கணனிகளை உற்பத்தி செய்யத் தயாராகி வருகின்றது. பிளாஸ்டிக் மீள்சுழற்சியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 10 தொன் எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்கள்(CD, DVD) இந்நிறுவனத்தால் பயன்படுத்தப்படவிருப்பதுடன், இதனால் 15 வீதமான காபனீரொட்சையிட் வெளியேற்றத்தையும் தடுக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.