இதனை டூடில்(Doodle) என அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். அந்த நாளுக்குப் பின்னர், வழமையான லோகோ காட்டப்படும்.
“அடடா! மிக நன்றாக, வேடிக்கையாக இருந்ததே கொப்பி செய்திடாமல் போய்விட்டோமே” என்று கவலைப்படுபவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களின் கவலையைப் போக்கும் வகையில் கூகுள் ஒரு புதிய வசதியை அளிக்கின்றது.
இதற்கு முதலில் Google Doodles இங்கு கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும்.
இந்த தளம் சென்றால் கூகுள் டூடில்ஸ் அனைத்தும் சேர்த்து வைத்திருப்பதனைக் காணலாம். இடது பக்கம் ஆண்டு வாரியாகத் தேடிக் காணும் வசதியும், வலது பக்கம் நாடு வாரியாகக் காணும் வசதியும் தரப்பட்டிருக்கும்.
இதில் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து காணலாம். இதில் ஏதாவது ஒரு டூடிலில் கிளிக் செய்தால், அதனை ஏன், எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்ற தகவல் கட்டுரையையும், டூடில் உருவாகும் பல்வேறு படிநிலைகளையும் காணலாம்.