
பிரபல சமூக வலைத்தளமாக பேஸ்புக்கிற்கு போட்டிய இணைய உலகின் சக்கரவர்த்தியாகத் திகழும் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Google + தொடர்பான புதிய வசதியினை அதன் மின்னஞ்சல் சேவையான ஜி மெயிலில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது கூகுள் பிளஸில் காணப்படும் வீடியோ சட்டில் நிகழ்நேரத்தில்(real time) ஒன்லைனில் உள்ளவர்களை ஜிமெயிலில் இருந்தவாறே அறிந்து கொள்ள முடிவதுடன் வீடியோ சட்டிங்கிலும் ஈடுபட முடியும்.
அதேவேளை அதிகபட்சமாக ஒன்பது வரையான நண்பர்கள் ஒன்றாக இணைந்து யூடியூப் வீடியோக்களையும், கூகுள் டாக்ஸ் தொடர்பான கோப்புக்களையும் தமக்குள் பரிமாறும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.