palamunaiworld.: outlook.co​mஇல் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுட​ன் சட்டிங் செய்வதற்கு


outlook.co​mஇல் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுட​ன் சட்டிங் செய்வதற்கு

ஹொட்மெயில் சேவைக்கு பதிலாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் சேவையே outlook.com ஆகும்.
இச்சேவையைப் பயன்படுத்தியவாறே பேஸ்புக் நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடுவதற்குரிய வசதியும் தரப்பட்டுள்ளது.
இவ்வசதியினை செயற்படுத்துவதற்கு முதலில் உங்கள் கணக்கினுள் உள்நுளைந்ததும் முதற்பக்கத்தில் காணப்படும் smiley icon இனை அழுத்தவும்.
தொடர்ந்து அதன் கீழே தரப்பட்டுள்ள பேஸ்புக்கின் லோகோவின் மீது அழுத்தி தொடர்ந்து தோன்றும் connect button இனை அழுத்தவும்.
அதன் பின்னர் தோன்றும் விண்டோவில் Allow என்பதை தெரிவு செய்து இறுதியாக Done பட்டனை அழுத்தி குறித்த இணையப் பக்கத்தினை refresh செய்து கொள்ளவும்.
தற்போது chat icon இனை கிளிக் செய்ததும் பேஸ்புக்கில் ஒன்லைனில் உள்ளவர்களை தெரியப்படுத்தும். அதன் பின் அவர்களுடன் சட்டிங்கில் ஈடுபட முடியும்.