palamunaiworld.: கூகுள் பிளே மியூசிக்கி​ல் உங்கள் பாடல்களை தரவேற்றம் செய்வதற்கு


கூகுள் பிளே மியூசிக்கி​ல் உங்கள் பாடல்களை தரவேற்றம் செய்வதற்கு

பல்வேறு இணைய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திவரும் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேலும் ஒரு வசதியே கூகுள் பிளே மியூசிக் ஆகும்.
இதில் தற்போது உங்கள் விருப்பப் பாடல்களின் தொகுப்புக்களையும் ஒன்லைனில் தரவேற்றம் செய்து பின் இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் எந்தவொரு அன்ரோயிட் சாதனத்தின் உதவியுடனும், கணனிகள், லப்டொப்கள், iOS போன்றனவற்றின் உதவியுடனும் எங்கிருந்தும் கேட்டு மகிழ முடியும்.

இவ்வசதியின் ஊடாக சுமார் 20,000 பாடல்களை சேமிக்க முடிவதுடன் கூகுள் பிளஸினூடாக நண்பர்களுடன் பகிரவும் முடியும்.
இவ்வசதியினை பயன்படுத்துவதற்கு Google Music Manger(http://minus.com/lQ3DDy4OHosEmஎனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிய பின்னர். அதனூடாக உங்கள் கூகுள் கணக்கினுள் நுளையுங்கள்.
தொடர்ந்து Upload songs to Google Play என்பதனை தெரிவு செய்து next பொத்தானை அழுத்தவும். தொடர்ந்து பாடல்கோப்புக்கள் காணப்படும் பகுதியை தெரிவு செய்யவும்.
உதாரணமாக iTunes, Windows Media Player, Music folder அல்லது Other folders. இவ்வாறு தெரிவு செய்த பின்னர் Google Music Manger தானாகவே பாடல்களை தரவேற்றம் செய்யும்.