கைப்பேசி உற்பத்திகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட Samsung நிறுவனமானது, தனது புதிய அறிமுகமாக Galaxy Music கைப்பேசிகளை அறிமுகம் செய்ய தயாராகின்றது.
சிறப்பான இசையை வழங்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்கைப்பேசிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன.
இவை தற்போது கூகுளின் இயங்குதளமான Android 4.0 Icecream Sandwich-னை அடிப்படையாகக் கொண்டு செயற்படவுள்ளதுடன், விரைவில் Android 4.1 Jelly Bean இயங்குதளத்திற்கு அப்டேட் செய்யப்படவுள்ளது.
மேலும் 3 அங்குல அளவு கொண்டதும், QVGA தொழில்நுட்பத்தில் அமைந்ததுமான தொடுதிரையினையும் உள்ளடக்கியுள்ளன.
அத்துடன் 850MHz வேகம் கொண்ட Processor, முதன்மை நினைவகமாக 512MB RAM இனையும், துணை நினைவகமாக 4GB Memory-யினையும் கொண்டுள்ளன.
இவற்றுடன் துணை நினைவகத்தினை அதிகரிக்கவும் முடியும்.