மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Word, Excel, Power point போன்ற
மென்பொருட்களை உள்ளடக்கிய Microsoft office-னைப் போன்று தற்போது CloudOn எனும்
புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Microsoft office போன்று அனைத்து வகையான Tool-களையும் உள்ளடக்கிய இந்த அப்பிளிக்கேஷன் Android இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களிற்கும், iPad போன்றவற்றிற்குமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உருவாக்கப்படும் கோப்புக்களை நேரடியாக Box, Dropbox மற்றும் Google Drive போன்ற ஒன்லைன் சேமிப்பகங்களில் சேமிக்க முடியும்.
தவிர Adobe Reader ஒன்றினையும் உள்ளடக்கியுள்ள இம்மென்பொருளில் காணப்படும் File Viewer மூலம் PDF, JPG, PNG, GIF போன்ற கோப்புக்களையும் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Android - தரவிறக்க சுட்டி
iPad - தரவிறக்க சுட்டி