palamunaiworld.: புதிய பயனர் இடைமுகத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது Gmail


புதிய பயனர் இடைமுகத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது Gmail

மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழ்கின்றது Gmail.
Gmail ஆனது சில நாட்களுக்கு முன்னர் புதிய மின்னஞ்சலை உருவாக்கும் பக்கத்திற்கு(Compose Mail) Pop-up விண்டோ மூலமான புதிய பயனர் இடைமுகத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது.
இப்புதிய வசதியின் மூலம் பயனர்கள் புகைப்படங்களை இலகுவாக இணைக்கக்கூடியதாகக் காணப்படுவதுடன், மின்னஞ்சலை பெறுபவர்களுக்கான முகவரியை செலுத்தும் போது அவர்களின் புகைப்படங்களும் தென்படக்கூடியவாறு அமைந்துள்ளது.
மேலும் Carbon Copy மற்றும் Blind Carbon Copy ஆகியவற்றிற்கான மின்னஞ்சல் முகவரிகளை உட்செலுத்தும் போது Drag and Drop முறையினை பயன்படுத்தக்கூடிவாறு காணப்படுதலும் விசேட அம்சமாகும்.
இதனைச் செயற்படுத்துவதற்கு உங்கள் Gmail கணக்கினை பயன்படுத்தி உள்நுளைந்து Compose பொத்தானை அழுத்தவும். அப்போது தென்படும் new compose experience எனும் இணைப்பின் மேல் கிளிக் செய்யும் போது தோன்றும் விண்டோவில் Got it பொத்தானை அழுத்தவும்.
இப்போது ஜிமெயிலின் புதிய Compose Mail விண்டோவினைப் பெற்றிருப்பீர்கள்.
மீண்டும் பழைய விண்டோவினைப் பெறுவதற்கு புதிய விண்டோவின் வலது கீழ்ப்பகுதியில் காணப்படும் அம்புக்குறி வடிவத்திலுள்ள பொத்தானை அழுத்தி Switch back to old compose என்பதை தெரிவு செய்யவும்.