
Windows, Mac, Linux மற்றும் Chrome OS போன்ற இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பில் வீடியோ கோப்புக்களை இலகுவாக பார்வையிடுவதற்காக GPU Accelerated எனும் புதிய அம்சம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீடியோ கோப்பினை Decoding செய்வதற்காக CPU - இனை விடவும் குறைவான வலுவே நுகரப்படுகின்றது. இதனால் கணனிகளில் காணப்படும் மின்கலங்களின் பாவனையானது அதிகரிக்க ஏதுவாக அமைகின்றது.
இது தவிர இணையப் பக்கங்களை இலகுவாக பார்வையிடக்கூடியதாகவும், Geolocation, Pop-Up மற்றும் JavaScript போன்றவற்றினை இணையப் பக்கங்களில் எவ்விதமான அமைப்பு மாற்றங்களையும் (Settings) மேற்கொள்ளாது பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
தரவிறக்க சுட்டி