palamunaiworld.: புதிய Mozilla Firefox-ன் பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு


புதிய Mozilla Firefox-ன் பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

இணைய உலகில் முக்கிய பங்கினை வகிக்கும் உலாவிகளுள் Mozilla -இனால் அறிமுகப்படுத்தப்பட்ட Firefox உலாவியானது ஏனைய உலாவிகளுக்கு மத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.
விரைவான உலாவல், இலகுவான பயனர் இடைமுகம் என இணையப் பாவனையாளர்களைக் கவர்ந்த இந்த உலாவியின் Firefox 16.0.2 எனும் புதிய பதிப்பினை Mozilla நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
Windows, Linux, Mac OS X மற்றும் Android இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உலாவியில் CSS3 Animation, Transition, Transform மற்றும் Gradient போன்ற எபெக்ட்கள் சிறப்பாக
செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் பொத்தான்களுடன் கூடிய புதிய Developer Toolbar, மேம்படுத்தப்பட்ட JavaScript பாவனை போன்ற அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவை தவிர இணைய வைரஸ்களிடமிருந்தான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான Security Update - களினையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Windows - தரவிறக்க சுட்டி

Linux - தரவிறக்க சுட்டி

Mac OS X - தரவிறக்க சுட்டி

Android - தரவிறக்க சுட்டி