palamunaiworld.: PDF கோப்பு ஒன்றின் அளவினை குறைப்பதற்​கு


PDF கோப்பு ஒன்றின் அளவினை குறைப்பதற்​கு

PDF கோப்பு ஒன்றின் கோப்பு அளவினை(File Size) குறைப்பதற்கென பல்வேறு மென்பொருட்களும், ஒன்லைன் சேவைகளும் காணப்பட்ட போதிலும் PDF Compressor எனும் மென்பொருளானது சாலச்சிறந்ததாகக் கருதப்படுகின்றது.
இதற்கு காரணமாக அசல் PDF கோப்பு ஒன்றின் அளவினைக் குறைக்கும் போது, அதன் தரத்தில் எதுவிதமான இழப்பும் ஏற்படாது காணப்படுவதுடன் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான PDF கோப்புக்களின் அளவினை
மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியதாகக் காணப்படுதலுமே ஆகும்.
இவற்றுடன் இலகுவான பயனர் இடைமுகம், Drag and Drop முறையிலான செயன்முறை போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
விண்டோஸின் XP, Vista மற்றும் 7 ஆகியவற்றின் 32 bit, 64 bit ஆகிய பதிப்புக்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளில் Encrypt செய்யப்பட்ட PDF கோப்புக்களையும் பயன்படுத்த முடியும் என்பது விசேட அம்சமாகும்.
இணையதள முகவரி