புகைப்படங்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்வதற்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்தில் பிரபலமடைந்த சேவையே Picasa ஆகும்.கணனிகள் மற்றும் மொபைல் சாதனங்களிலிருந்து இலகுவாக புகைப்படங்களை பகிர்வதற்கான விசேட மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இந்நிலையில் தரவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை Google+ ஊடாக பேக்கப் செய்யும் வசதியினை, Windows மற்றும் Mac இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட கணனிகளில் பயன்படுத்தப்படும் புதிய Picasa மென்பொருளின் ஊடாக விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை Google+ மூலம் தானாகவே பேக்கப் செய்யப்படும் படங்கள் அனைத்தும் Google Drive இல் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. DOWNLOAD
