
அமெரிக்காவின் ‘லோவா’ மாகாண பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை நிபுணர்கள் உலகளவில் நடைபெறும் வன்முறைக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வன்முறை சம்பவங்கள் குழந்தை பருவத்தில் இருந்தே மனதில் ஊறி விடுவது தெரியவந்தது. அதில் முக்கிய பங்கு வகிப்பது ‘வீடியோ கேம்ஸ்’ என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் மிகவும் வன்முறை சம்பவங்கள் நிறைந்த ‘வீடியோ கேம்ஸ்’களையே விரும்பி பார்க்கின்றனர். அதுவே அவர்களின் மனிதல் வன்முறையை வளரச் செய்கிறது.
எனவே, அது போன்ற ‘வீடியோ கேம்ஸ்’களை குழந்தைகள் பார்க்க பெற்றோர் அமைதிக்க கூடாது என்று ஆய்வில் ஈடுபட்ட உளவியில் பேராசிரியர் டக்லிஸ் ஜென்டைல் அறிவுறுத்தியுள்ளார்.