palamunaiworld.: உலகின் முதன் முறையாக அதிக பெறுமதி உடைய கைபேசி அறிமுகம்


உலகின் முதன் முறையாக அதிக பெறுமதி உடைய கைபேசி அறிமுகம்

இதுவரை காலமும் கைப்பேசிகளில் ஐபோன் வகை கைப்பேசிகளே அதிக பெறுமதி உடையனவாக காணப்பட்டன.
ஆனால் தற்போது சுவிஸ் நாட்டின் பொறியிலாளர்களின் வடிவமைப்பு மூலம் முதலாவது அதி பெறுமதியுடைய கைப்பேசி உருவாக்கப்பட்டுள்ளது.
ரைற்றானியம், காபன் நார்களை கொண்டும் அதிர்ச்சியை உறுஞ்சுவதற்காக இறப்பரை கொண்டும் உருவாக்கப்பட்ட இந்த கைப்பேசியானது உயர் வேகம் கொண்ட புரேசசரின் மூலம் அதி உயர் வினைத்திறன் உடையதாகவும் கொண்டிருப்பதுடன் முப்பரிமாண பயனர் இடைமுகத்தையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படவுள்ள இந்த கைப்பேசி மேலும் நீரினால் பாதிக்காதவாறு அதன் புறமேற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 2800 யூரோக்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது