கூகுள் தயாரிப்புக்கள் என்றாலே அதில் எளிமை வேகம் இருப்பது நிச்சயம். அது குரோமிலும் கிடைக்கின்றது.
உலாவியைத் திறந்ததும் அட்ரஸ் பார் மட்டுமே தெரியும். டூல்பார் மெனுக்கள் போன்றவை இல்லாத வடிவமைப்பு குரோமின் முதல் சிறப்பாகும்.
அடுத்த சிறப்பு இதன் தொடக்க வேகம். டெஸ்க்டாப்பில் குரோம் ஐகானை அழுத்திய மறு விநாடி உலாவி திறந்து விடும். உலாவியைத் திறந்ததும் அட்ரஸ் பார் மட்டுமே தெரியும். டூல்பார் மெனுக்கள் போன்றவை இல்லாத வடிவமைப்பு குரோமின் முதல் சிறப்பாகும்.
ஒவ்வொரு பதிப்பிலும் குரோமின் வேகம் அதிகரிக்கப்பட்டு தற்போது வேகத்தில் பயர்பொக்ஸை முந்தியுள்ளது.
Adobe Flash: குரோம் உலாவி Adobe Flash இணைக்கப்பட்டே வெளிவருகின்றது. குரோமை நீங்கள் நிறுவினாலே Adobe Flash ம் உடன் வந்து விடும். Adobe Flash இன் புதிய பதிப்புகள் ஏதாவது வந்தால் குரோம் உலாவியே தானியங்கியாக அப்டேட் செய்து விடும்.
Sync: நீங்கள் ஏற்கனவே குரோம் உலாவியைப் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கு Sync பற்றி தெரிந்து இருக்கும். குரோம் Sync என்பது உங்கள் குரோம் உலாவியில் நீங்கள் வைத்துள்ள புக்மார்க்குகளை உங்கள் கூகுள் கணக்குடன் Sync செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் உங்கள் புக்மார்க்குகளை எங்கு இருந்து வேண்டும் என்றாலும் எளிதாக பயன்படுத்தலாம். இதையே குரோம் தற்போது இன்னும் மேம்படுத்தியுள்ளது.
இனி புக்மார்க்குடன் குரோம் முகப்பு பக்கம், Theme, Startup settings, Web content settings மற்றும் உங்கள் மொழி ஆகியவற்றையும் Sync செய்து கொள்ள முடியும். இது ஒரு அட்டகாசமான சேவை. எங்கே சென்றாலும் நம்முடைய settings ஐ பயன்படுத்தலாம்.
Incognito Mode: உலாவியில் மிகச்சிறப்பான பகுதி இது. நாம் தற்போது ஒரு சில இணைய தளங்களை ரகசியமாக பார்க்க வேண்டும் என்றால் அதாவது தடையம் இல்லாமல் அதற்கு இந்த வசதி பேருதவி செய்கிறது.
இந்த வசதியை பயன்படுத்தும் போது இது எந்த ஒரு அடையாளத்தையும் விட்டுச்செல்லாது(History மற்றும் Cookies). எனவே வங்கி மற்றும் Adult தளங்களை பார்வையிட இந்த வசதியை பயன்படுத்தலாம் குறிப்பாக. பெரும்பாலனவர்கள் Adult தளங்களை பார்வையிடுகிறார்கள் அவர்களுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும்.
இதில் முந்தைய பதிப்பில் நீட்சிகளை பயன்படுத்த முடியாது, இது தற்போதைய பதிப்பில் சரி செய்யப்பட்டுள்ளது. இனி நீட்சிகளை இதில் பயன்படுத்தலாம் Enable செய்வதன் மூலம்.
இந்த வசதியை உங்கள் அனைவருக்கும் நீங்கள் வெளி இடங்களில், நண்பர்கள் வீட்டில், பொது இடங்களில் குறிப்பாக Browsing Center ல் இணையத்தை பயன்படுத்தும் போது இந்த முறையை கையாளும்படி பரிந்துரைக்கிறேன்.
இதன் மூலம் உங்கள் கடவுச்சொல்(Password) மற்றும் உங்களை பற்றிய இணைய நடவடிக்கை தொடர்பான தகவல்கள் சேமிக்கப்படாது. இதை குரோம் உலாவியில் ctrl+shift+N அழுத்துவதன் மூலம் இலகுவாக செயற்படுத்தலாம்.
Silent Update: எந்த உலாவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோமில் உள்ளது. அதாவது கூகுள் குரோம் பிரவுசர் புதிய பதிப்பை வெளியிட்டவுடன் குரோம் உலாவியை பயன்படுத்துபவரின் அனைவருக்கும் இந்த உலாவி தானாகவே அப்டேட் ஆகிவிடும்.
HTML 5 Speech API: புதிய பதிப்பில் உள்ள ஆச்சரியமான வசதி HTML 5 Speech API. நம்மில் பெரும்பாலானோர் API எனப்படும் embedded form நம் பிளாக்கில் நிருவியிருப்போம். அதில் இனி நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் மைக்ரோபோனில் வார்த்தையை சொன்னாலே அது தட்டச்சு செய்யும்