palamunaiworld.: தனது சேவையை நீருக்கு அடியிலும் விஸ்தரிக்கு​ம் கூகுள் ஏர்த்


தனது சேவையை நீருக்கு அடியிலும் விஸ்தரிக்கு​ம் கூகுள் ஏர்த்

தாம் பிறந்த ஊரிலேயே பல இடங்களை பார்த்து இரசிக்க முடியாதவர்களையும் இருந்த இடத்திலிருந்தே உலகின் அனைத்து பகுதிகளையும் பார்த்து இரசிக்கும் வசதியை கூகுள் எர்த் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தற்போது நீரிற்கு அடியிலுள்ள பகுதிகளையும் நமது கண்முன்னே கொண்டுவரும் பொருட்டு தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளது.
இச்சேவையின் மூலம் கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் வரையான ஆழமான பகுதியை அவதானிக்க முடியும்.
இதன் ஆரம்ப கட்டமாக கடற்படுக்கைகளின் 50,000 படங்கள் இணைக்கப்பட்டு 360 டிகிரியில் சுற்றிப்பார்க்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் மாணவர்கள் உட்பட விஞ்ஞானிகளும் பயனடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.