Panasonic நிறுவனமானது Eluga DL1 எனும் தனது புதிய கைப்பேசிகள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.முதன் முறையாக ஐரோப்பின நாடுகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இக்கைப்பேசிகளுடன் இலவசமான சிம்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கைப்பேசிகள் 4.3 அங்குல அதி உயர் திறன் கொண்ட 540 x 960 pixels உடைய தொடுதிரை வசதியைக் கொண்டுள்ளது.
மேலும் 1GB RAM,1GHz வேகத்தைக் கொண்ட procecers என்பனவற்றுடன் அன்ரோயிட் 2.3 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதியானது 370 அமெரிக்க டொலர்கள் ஆகும்.