இதன் அடிப்படையில் மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும் போன்களுக்கான 50 GB வரையான இலவச ஒன்லைன் சேமிப்பு இடவசதியை வழங்கும் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும் ஏனைய விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சேவையினைப் பயன்படுத்தி எந்தவொரு இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும், எந்தவொரு சாதனங்களிலிருந்தும் தகவல்களை தரவேற்றம் செய்யவும், தரவிறக்கம் செய்யவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.