palamunaiworld.: பொன்மொழிகளுக்கான இணையத்தளம்


பொன்மொழிகளுக்கான இணையத்தளம்

கோட ஆல்பம் என்ற இணையத்தளம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தேடலை எளிமையாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் நிறைவேற்றி தருகிறது.
இதற்கு காரணம் தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லா பொன்மொழி தளங்கள் போன்றது என்றாலும், கூடுதல் அம்சங்களோடு செறிவானதாக உருவாக்கப்படுள்ளது கோட் ஆல்பம்.

வெறும் பொன்மொழிகளின் பட்டியலாக இல்லாமல் தேவைக்கேற்ற வகையில் பொன்மொழிகளை தேடிக்கொள்ளும் வகையில் இது அமைந்துள்ளது.

பொன்மொழிகளை இதில் பலவிதங்களில் தேடலாம். குறிப்பிட்ட தலைப்புகளின் கீழான பொன்மொழிகள் தேவை என்றால் பொன்மொழி வகைகளை கிளிக் செய்து தேடிக் கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட மேதை அல்லது எழுத்தாளர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் சொன்ன பொன்மொழிகளாக தேடிக்கொள்ளலாம்.

எழுத்தாளர்கள் மற்றும் தலைப்புகளின் பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர குறிப்பிட்ட குறிச்சொல்லிற்கான பொன்மொழிகளையும் தேடலாம்.

இன்னுமொரு சிறப்பம்சமாக பொன்மொழி நாட்காட்டி அமைந்துள்ளது. நாட்காட்டியில் குறிப்பிட்ட நாளில் பிறந்த மேதைகளின் பொன்மொழிகளை அறிந்து கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி