palamunaiworld.: USB இணைப்பு மூலம் சார்ஜ் செய்யக்கூடி​ய AA மின்கலங்கள் அறிமுகம்


USB இணைப்பு மூலம் சார்ஜ் செய்யக்கூடி​ய AA மின்கலங்கள் அறிமுகம்

மீண்டும் மீண்டும் மின்னைச் சேமித்துப் பயன்படுத்தும் மின்கல வகைகளுள் ஒன்றான AA அளவு கொண்ட மின்கலங்களை USB இணைப்பு மூலம் கணனிகளில் இணைத்து சார்ஜ் செய்யக் கூடியவாறு உருவாக்கி புதிய புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Wonchul Hwang மின்கல வடிவமைப்பாளர்களினால் உருவாக்கப்பட்ட இம்மின்கலத்தில் காணப்படும் USB இணைப்பி மூலம் மின்கலத்தை சார்ஜ் செய்வதுடன், குறித்த மின்கலத்தில் கோப்புக்களை சேமித்து வைக்கும் விசேட வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு புதிய புரட்சியுடன் அறிமுகமாகியுள்ள இம்மின்கலங்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பதாக Wonchul Hwang நிறுவனம் தெரிவித்துள்ளது.