palamunaiworld.: CCleaner v3.26 இலவச புதிய பதிப்பில்


CCleaner v3.26 இலவச புதிய பதிப்பில்

கணனியின் சேமிப்பு சாதனங்களில் தற்காலிகமாக தேங்கி அதன் இயக்கத்திற்கு இடையூறாக விளங்கும் கோப்புக்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் CCleaner ஆனது சிறந்ததாகவும் இலவசமானதாகவும் காணப்படுகின்றது.
தற்போது இதன் புதிய பதிப்பான CCleaner v3.26 ஆனது மைக்ரோசொப்டின் Windows மற்றும் அப்பிளின் Mac இயங்குதளங்கள் என்பனவற்றிற்காக வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் Windows இயங்குதளத்திற்கென வெளியிடப்பட்ட பதிப்பில் Firefox add-on மற்றும் Google Chrome extension போன்றவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் Office 2013, Adobe Reader 11.0 போன்றவற்றிலான கோப்புக்களை நீக்கும் வசதி உட்பட முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று Mac இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட பதிப்பில் Google Chrome cache - இனை அதிவிரைவாக சுத்தம் செய்யக்கூடியவாறும் மெமரி பாவனையை சிறந்த முறையில் கையாளக்கூடியவாறும் மேம்படுத்தப்பட்டுள்ளது.                                                                                                              
 CCleaner v3.26 for Windows - Download - தரவிறக்க சுட்டி                                                               
CCleaner v1.06 for Mac - Download - தரவிறக்க சுட்டி