palamunaiworld.: Tweet செய்யப்பட்​ட தகவல்களை மீள்பெறுவதற்கு


Tweet செய்யப்பட்​ட தகவல்களை மீள்பெறுவதற்கு

பிரபலமான சமூக இணையத்தளங்களுள் ஒன்றான Twitter தளத்தினை பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பிரபலமான Twitter தளமானது, தனது பயனர்களுக்காக Tweet செய்யப்பட்ட தகவல்களை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கு உங்கள் Twitter கணக்கினை பயன்படுத்தி உள்நுழையவும்.
இதன் பின் சக்கர வடிவில் இருக்கும் ஐகானை கிளிக் செய்து, Settings - ஐ தெரிவு செய்யவும். தொடர்ந்து Your Twitter Archive எனும் பகுதிக்கு சென்று Request your archive எனும் பொத்தானை அழுத்தவும்.

இப்போது உங்களால் விடுக்கப்பட்ட தரவிறக்க வேண்டுகோள் ஆனது Twitter குழுவினை சென்றடையும்.
இதன்பின்னர் அவர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு ஒன்றினை அனுப்புவார்கள், அதில் கிளிக் செய்து உங்கள் தகவல்கள் அனைத்தினையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.