palamunaiworld.: கைபேசி அழைப்பை டாட்டூ(Tattoo) மூலம் அறிந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம்


கைபேசி அழைப்பை டாட்டூ(Tattoo) மூலம் அறிந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம்

மிகுந்த சத்தம் நிறைந்த கடை வீதிகள், பேருந்து, ரயில் பயணங்களில் நமக்கு அழைப்பு வந்தால் கேட்பதில்லை. இதனால் சிலருக்கு பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுவதுண்டு.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நோக்கியா புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளது.
டாட்டூ ஒன்றை உடலில் ஒட்டி, அதன் மூலம் கைபேசிகளுக்கு வரும் அழைப்புகளை அறிந்து கொள்ள இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
உடம்பில் ஒட்டப்பட்டுள்ள டாட்டூ, நமது கைபேசிக்கு அழைப்பு வந்தால் அதிர்ந்து நமக்கு அந்த அதிர்ச்சி மூலம் தெரிவிக்கும்.

அதே போல கைபேசியின் பற்றரி மிகவும் குறைவான நிலையை அடைந்து விட்டாலும், இதே போல நமக்கு அறிவிக்கும்.
நோக்கியா நிறுவனம் அண்மையில் தான் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பத்திற்கான உரிமையினைப் பதிவு செய்திட விண்ணப்பம் அளித்துள்ளது.
இந்த டாட்டூவில் ஒருவகையான உலோகக் கலப்பு பயன்படுத்தப்படுகிறது. இது கைபேசி அழைப்பு வரும் போதும், பற்றரி சக்தி குறைந்த நிலையை அடையும் போதும் ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தும்.
இதனைக் கொண்டிருப்பவர் டாட்டூவைத் தேய்த்து இந்த உணர்வினை நிறுத்த வேண்டும். இதன் மூலம் நமது அழைப்புகளை எளிதில் அறிந்து கொள்ளலாம்.